எங்கிருந்து வருகிறது நிழல்... சிவனின் நிழலா? - சாயா சோமேஸ்வரா சுவாமி கோயிலில் நிகழும் அதிசயம்
பல்வேறு மர்மம்ங்கள் நிறைந்த கோயில்கள் வரிசையில் தெலுங்கானாவில் இருக்கும் சாய சோமேஸ்வரர் சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு இருக்கும் மூன்று கருவறையில் மூன்று விதமாக விழும் நிழல் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.

 


இந்து கோயில்கள்


நம் நாட்டில் இந்து கோயில்களுக்கு பஞ்சமே இல்லை. பல ஆயிரம் கோயில்கள் இருந்தாலும், ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டதாக காணப்படுவது தான் மிகவும் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.


 


தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம், பழனி என மிகவும் தொன்மையான மற்றும் பல்வேறு தனி சிறப்பம்சங்களுடன் திகழ்கின்றன.



மன்னர்கள் இறைவனுக்கு கட்டிய ஆலயங்களில் இறைவனை சிறப்பிப்பதற்காக மட்டுமல்லாமல், அந்த காலத்தின் கலை, கட்டிட திறமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு அம்சங்கள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.


 


இப்படி மன்னர்கள் தாங்கள் கட்டும் கோயில் மற்றும் கட்டிடங்களில் சில மர்மங்கள் நிறைந்ததாகவும் கட்டுகின்றனர். அவற்றில் பல இன்றளவும் ஏன்ன என்பதை அறிந்து கொள்ள முடியாமல் வியக்க வைக்கும் வகையில் உள்ளன.