நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 ஊராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு குப்பம்பாளையம் பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை K ராதாகிருஷ்ணன் அவர்களும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் விஜய கார்த்திகேயன் IAS அவர்களும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. கரைப்புதூர் A.நடராஜன் MLA கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர். உடன் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் சேர்மன் சிவாச்சலம், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், Ex, வைஸ் சேர்மன் கோபாலகிருஷ்ணன், US.பழனிச்சாமி, காட்டூர் பிரகாஷ், ஹரிகோபால், மோகன்ராஜ், நாகஜோதி, கதிர், முருகராஜ், தங்கவேல், சுப்பிரமணி, சிதம்பரசாமி, ஜோதிமணி, EX,DC.பழனிச்சாமி, மாவட்ட, ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், மற்றும் சொசைட்டி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்