திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் தேசிய ஒருமைப்பாடு தினம் கடைபிடிக்கப்பட்டது - நூலகர் தேவகி தலைமை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சுதந்திரத்துக்குப்பின் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒரே இந்தியாவாக மாற்றிய பெருமைக்குரியவர் வல்லபாய் படேல். 'இரும்பு மனிதர்' என போற்றப்படும் இவரது பிறந்த தினம், அக்., 31ல் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என உளமாற உறுதியளிக்கிறேன் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என உளமாற உறுதியளிக்கிறேன் என வாசகர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தேசிய ஒருமைப்பாடு தின விழா